தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காவல்துறையினர் உள்ளிட்டோர் தபால் வாக்கு செலுத்த தகுந்த ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இஇதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 3.04 லட்சம் வாக்குப்பதிவு அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்த உள்ளனர். இதன்படி தமிழகம் முழுவதும் தபால் வாக்கு செலுத்தும் பணி இன்று தொடங்கியது. வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது பயிற்சி முகாம் நடைபெறும் இடங்களில் இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பயிற்சி மையங்களிலேயே தங்களின் தபால் வாக்குச்சீட்டுகளைப் பெற்று, அதே இடத்திலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம்.
சென்னையில் மொத்தம் 16 மையங்களில் தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது. இதன் பிறகு ஏப்ரல் 19ம் தேதியும் வாக்குகளை பதிவு செய்யலாம். தேர்தல் பணியில் காவல்துறையினர் தபால் ஏப்ரல் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும், அரசுப் போக்குவரத்து துறை ஊழியர்கள், ஊடகத்தினர் மற்றும் பிற துறைகளில் பணிபுரிபவர்களுக்கும் இதே தேதிகளில் தபால் வாக்கு பதிவு செய்யலாம்.