சென்னை தி.நகர், எழும்பூர், திருவல்லிக்கேணியில் இன்று (ஏப்ரல் 15) மதியம் 3 முதல் மாலை 6 மணி வரை தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
முதலில் திநகரில், தவெக வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். வேனில் நின்ற படி வந்த அவர், சாலையின் இரு புறமும் நின்ற மக்களை நோக்கி கை அசைத்தபடியே சென்றார். விஜயை பார்க்க தடுப்புகளை தாண்டி இளைஞர்கள் வர முயன்றனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.
திநகரில் விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்திற்கு வந்த விஜய் வாகனம் ஓரிரு வினாடிகள் அங்கு நின்றுவிட்டு கிளம்பி சென்றது. விஜய் எதுவும் பேசவில்லை.
இதனால் காத்திருந்த அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்