விஜயகாந்த் திருமணத்தில் ராமராஜன் நளினி…! வைரல் போட்டோ!
CineReporters Tamil April 16, 2026 02:48 AM

தமிழ்த்திரை உலகில் ‘கருப்பு எம்ஜிஆர்’ என்று எல்லோராலும் போற்றப்பட்டவர் விஜயகாந்த். இன்று அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது நினைவுகள் என்றும் அழிவதில்லை. அந்த அளவு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. 1990ல் அவருக்கு திருமணம் நடந்தது. பிரேமலதாவை மணந்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.

மதுரையில் இருந்து சென்னை வந்த விஜயகாந்த் திரையுலகில் படிப்படியாக முன்னேறினார். அப்போது ஒரு பிரபல நடிகையுடன் காதல் கிசு கிசு வந்தது. இதற்கிடையில் பிரேமலதாவை பெண் பார்க்கப் போய் அவர்களுக்குள் பிடித்துப் போய் கல்யாணம் நடைபெற்றது. கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ராமராஜன், நளினி கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு முன்பு விஜயகாந்துக்கு ராதிகா உடன் காதல் இருந்ததாம். அது தோல்வியில் முடிந்ததாகவும் சொல்லப்படுகிறது. விஜயகாந்தின் உழவன் மகன் படத்தைப் பார்த்து விட்டு தொடர்ந்து விஜயகாந்த் ரசிகையாகி விட்டாராம் பிரேமலதா. திருமணத்திற்கு பிறகு விஜயகாந்துக்கு வரும் ரசிகைகளின் கடிதங்களை பிரேமலதா தான் படிப்பாராம்.

விஜயகாந்த் கலைஞரின்பால் ஈர்க்கப்பட்டவர். ராமராஜன் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். அவரது கட்சித் தொண்டரும்கூட. இப்படி இருவரும் வேறு வேறு கொள்கையில் இருந்தவர்கள். அப்படி இருக்க எப்படி விஜயகாந்த் கல்யாணத்தில் ராமராஜனும், நளினியும் வந்தார்கள் என்றும் பார்க்கப்படுகிறது. அப்போது விஜயகாந்த் புகழின் உச்சியில் இருந்த நேரம் ராமராஜன் கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் முன்னேறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.