வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று நாம் எழுப்பிய குரல் இன்றும் அப்படியேதான் இருக்கிறது என கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார்.
சேலம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்ற ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், திராவிட மாடல் அரசின் திட்டத்தினால், உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை. இந்த முன்னேற்றம் வட மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மிக அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது ஒரு சிறந்த முன்னுதாரணம்.
நீ ஏன் இன்னும் திமுகவில் சேரவில்லை என கலைஞர் என்னிடம் கேட்டார். அப்போது பதில் சொல்ல தைரியம் இல்லை. இப்போது சொல்கிறேன். கூட்டமெல்லாம் குடும்பமாகிவிடாது. அது கலைந்துவிடும். 75 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைக் கட்டிக்காத்த குடும்பம் தி.மு.க. அதில் நானும் ஒருவன். வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று நாம் எழுப்பிய குரல் இன்றும் அப்படியேதான் இருக்கிறது. நாளை நமக்கு நடக்கும் அநீதிக்கு எதிரான குரலாக நமது குரல் இருக்க வேண்டும். இந்த 33% என்பது தூண்டில் நுனியில் வைத்திருக்கும் சின்ன மீன். அதை நாங்கள் கவ்வமாட்டோம்.