கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்துகிறது இந்த எண்ணெய்
Top Tamil News April 16, 2026 07:48 AM

பொதுவாக உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை மீன் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.மீனில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .அது மட்டுமல்லாமல் மழைக்கு கூட மருத்துவமனை பக்கம் ஒதுங்காமலிருக்க பின்வரும் ஆரோக்கிய குறிப்புகளை கடை பிடியுங்கள் 

1.சிலர் அடிக்கடி மீன் சாப்பிடுவர் .மீனில் உள்ள எண்ணெய் உடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்துகிறது.
2.சிலர் அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக்கொண்டேயிருப்பர் .சாப்பாடுகளுக்கு இடையே 3 மணி நேர இடைவெளி விட்டு சாப்பிடுவது நாம் உண்ணும் உணவு நன்கு ஜீரணம் அடைந்து அதில் உள்ள சத்துகள் முழுமையாக நமக்கு கிடைக்கும். 
3.சிலர் காலை உணவை தவிர்ப்பர் .மூன்று வேலை உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
4.சிலர் அதிகம் காபி குடிப்பர் .அளவுக்கு அதிகமாக காபி  குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும்.ஒரு நாளைக்கு அதிகபட்சம் 4 முறை குடிக்கலாம்.
5.சிலர் தண்ணீர் குடிப்பது போல் காபி குடிப்பர் .காபியை அளவாக குடித்தால் சர்க்கரை நோய், உணவுக் குழாய் கேன்சர், ஈரல் நோய் போன்றவைகளை தடுக்கலாம்.
6.சிலர் பழம் ,காய் கறி அதிகம் சாப்பிடுவர் தினசரி 5 வகையான  பழஙகள், காய்கறிகள் சாப்பìடுவது ஆரோக்கிய வாழ்வுக்கு நல்லதாகும்.
7.பழங்கள், காய்கறிகளில் உள்ள `ஆண்டிஆக்ஸிடன்ட்கள்’ கேன்சர், இருதய நோய்கள் போன்ற மோசமான நோய்களைத் தடுக்கும்; . 
8.மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். 
9.சிலர் வெஜிடபிள் சாலட் எடுத்து கொள்வர் .காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரைச் சத்தையும் கொண்டுள்ளன.
10.தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.