'அரசியலில் லாலிபாப் சாப்பிடுகின்ற சிறு குழந்தை'; விஜய்யை விமரித்துள்ள பிரேமலதா விஜயகாந்த்..!
Seithipunal Tamil April 16, 2026 07:48 AM

தமிழக அரசியலில் 75 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட திமுகவின் வலிமையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும், அரசியலில் நீங்கள் ஒரு 'சின்ன பையன்' மட்டுமே, நிஜமான 'கதாநாயகன்' அல்ல என்றும் தவெக தலைவர் விஜய்யை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மறைமுகமாக (பெயர் குறிப்பிடாமல்) விமர்சித்துள்ளார்.

சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை பேரணி மேற்கொண்டனர். அப்போது பேசிய பிரேமலதா கூறியதாவது;

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அரசியல் களத்தில் சரியான காய்களை நகர்த்தி, தேமுதிகவை கூட்டணிக்குள் அழைத்து வந்ததன் மூலம் என் அண்ணன் ஸ்டாலின் ஒரு கேம் சேஞ்சராக மாறியுள்ளார் என்றும், இந்தக் கூட்டணி வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது மகளிர் நலத் திட்டங்களுக்காக முதலமைச்சரைப் பாராட்டிய அவர், "பெண்களுக்கான உரிமைத் தொகை முதல் விடியல் பயணம் வரை பல்வேறு திட்டங்களை அளித்து, என் அண்ணன் ஸ்டாலின் இன்று தமிழக பெண் இனத்தின் உண்மையான பாதுகாவலராகத் திகழ்கிறார். பெண்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பாராட்டுக்குரியது," என புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா, ''புதிதாக ஒரு தம்பி வந்திருக்கிறார், முதல் அடி வைக்கும் பொழுது நீங்கள் எதிராளிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது, முதலில் வாக்கு வங்கியை நிரூபியுங்கள், நீங்கள் அரசியலில் லாலிபாப் சாப்பிடுகின்ற சிறு குழந்தை" தமிழாகி வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பெரிய குறிப்பிடாமல் விமரித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.