விஜயின் நடித்துள்ள ஜனநாயகன் முழுத் திரைப்படமும் அண்மையில் இணையத்தில் கசிந்து தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது ரசிகர்களுக்கு மேலுமொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தது தெரிந்த்வுடன் படதயாரிப்பு நிறுவனம் தீவிர ஆண்டி பைரசி நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த காட்சிகள் பரவுவரை தடுத்துள்ளது
ஒரு திரைப்படம் நூற்றுக்கணக்கான நபர்களின் கடின உழைப்பால் உருவாகிறது. குறிப்பாக விஜய் , ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு இயக்குநர் முதல் கடைக்கோடி ஊழியர் வரை இரவுப் பகல் பாராமல் தங்களது உழைப்பை கொடுக்கிறார்கள். அப்படி உருவாகும் திரைப்படத்தை ஒரே இரவில் மொத்தமாக இணையத்தில் வெளியிடுவது அத்தனை பேரின் உழைப்பை பாழாக்குவதின்றி வேறென்ன.
அப்படிதான் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை அண்மையில் சிலர் இரவோடு இரவாக இணையதளத்தில் வெளியிட்டார்கள். ஒரு வருட கடின உழைப்பில் சுமார் ரூ500 கோடி செலவில் உருவான மொத்த படம் இணையத்தில் வெளியாகி காட்டுத்தீப்போல் பரவியது. ஏற்கனவே படத்தின் ரிலீஸ் தேதி தாமதத்தால் பிஸ்னஸை இழந்த கேவிஎன் ப்ரோடக்ஷன்ஸ் தற்போது கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். ஜனநாயகன் படத்திற்காக பணியமர்த்தப்பட்ட ஃப்ரீலான்ஸ் எடிட்டர் ஒருவரே இந்த படத்தை இணையத்தில் கசியவிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
அந்த நபருடன் மொத்தம் ஆறும் பேரை காவல் துறை கைது செய்துள்ளது. ஜனநாயகன் படம் கசிந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் வெளிவருவதற்கு முன்பே மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்ச்கள் சண்டிகரில் படமாக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் நடிக்க இருந்தார். பின்னர் அவர் விலகி தற்போது பாலையா இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் 2 க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தபோது அதனை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியானதும் அதனை தடுக்க அப்படத்தின் தயாரிப்பாளர் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் போல் இல்லாமல் ஜெயிலர் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த விஷயத்தில் மிகத் துரிதமாக செயல்பட்டுள்ளது. ஜெயிலர் 2 படத்தின் காட்சிகள் வெளியானது தெரிந்ததும் உடனே இந்த காட்சிகள் பகிரப்படுவதை சன் பிக்க்சர்ஸ் நிறுவனம் தடுத்தது. மேலும் காட்சிகளை பகிர்பவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தது. தயாரிப்பு நிறுவனத்தின் துரிதமான முயற்சியால் ஜெயிலர் 2 பட காட்சிகள் இணையத்தில் பகிரப்படுவது உடனடியாக தடுக்கப்பட்டது.