கேரளாவில் இருந்து வால்பாறையில் 16 பேர் பயணம் செய்த சுற்றுலா வேன் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது மலைச்சாலையில் வேன் உருண்டு விழுந்ததில் முற்றிலும் நொறுங்கியுள்ளது. சுற்றுலாவை முடித்துக்கொண்டு திரும்புதும் போது வளைவில் வாகனம் திரும்பும் போது விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிலர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.