சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கணிசமாக அளவில் குறைந்தது. இந்த நிலையில், வார இறுதியில், அதாவது இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் ஒரு சவரனுக்கு 1,200 ரூபாய் விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று கணிசமாக விலை குறைந்தது. ஆனால், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், வாரத்தின் இறுதி நாளில், அதாவது சனிக்கிழமையான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக 1,200 ரூபாய் உயர்ந்துள்ளது.. அதன்படி, கிராமிற்கு 150 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,360 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, இன்றும் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.