10 ஆயிரம் வீரர்கள்.. நூற்றுக்கணக்கான போர் விமானங்கள்!.. ஈரானை நெருங்கும் அமெரிக்கா!...
Webdunia Tamil April 18, 2026 07:48 PM


ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 18ம் தேதி அந்த நாட்டின் மீது போரை துவங்கியது.. ஈரான் சின்ன நாடு.. அடிபணிந்துவிடும்.. அந்த நாட்டில் இருக்கும் எண்ணை வளங்களை எடுத்துக் கொள்ளலாம் என அமெரிக்கா கணக்கு போட்டது.

ஆனால் ஈரானோ அடிபணிய மறுத்து அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும், இஸ்ரேல் நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது. ஈரான் இப்படி திருப்பி தாக்கும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. ஒருபக்கம் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் செல்லும் கடல் வழியான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் அரசு மூடிவிட்டது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. கேஸ் சிலிண்டர் கிடைக்காததால் பல ஹோட்டல்களும் மூடப்பட்டிருக்கிறது..

ஒருபக்கம் ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.. ஏற்கனவே பாகிஸ்தானில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் விரைவில் மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. ஒரு வழியாக ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் அரசு திறந்துவிட்டது. எந்த நாட்டைச் சேர்ந்த கப்பலாக இருந்தாலும் ஹோர்மூஸ் வழியாக செல்லலாம் என ஈரான் அறிவித்துவிட்டது. இதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றார்..

இந்நிலையில் அரபிக் கடலில் ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளை குறி வைத்து முற்றுகையை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், நூற்றுக்கணக்கான போர் விமானங்களுடன் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் களமிறங்கியிருக்கிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.