Kara Movie: தனுஷின் கர படத்திற்கு கிடைத்தது சென்சார்.. யாரெல்லாம் படத்தை பார்க்கலாம் தெரியுமா?
TV9 Tamil News April 18, 2026 09:48 PM

இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் (Vignesh Raja) இயக்கத்தில், சிறப்பாக தயார்க்கியுள்ள திரில்லர் திரைப்படம்தான் கர (Kara). இந்த படத்தில் நடிகர் தனுஷ் (Dhanush) லீட் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் மமிதா பைஜூ (Mamitha Baiju), கே.எஸ்.ரவிக்குமார் (KS Ravikumar), சுராஜ் வெஞ்சாரமூடு (Suraj Venjaramoodu), கருணாஸ் மற்றும் ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது தனுஷின் 54வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கி, டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்தது. அந்த விதத்தில் கிரடி ஆக்ஷன், எதிர்பாராத திருப்பங்கள் போன்ற ஜானரில் இந்த படமானது தயாராகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்திருக்கும் நிலையில், இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இப்படம் வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கு சென்சார் கிடைத்துள்ளது. தனுஷின் இந்த கர படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் (U/A censor certificate) கிடைத்திருக்கும் நிலையில், இப்படத்தை 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி உரிமை பெற்ற பிரபல நிறுவனம்? அட இத்தனை கோடியா?

கர படத்தின் சென்சார் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

#KaraGetsUA 💣

See you at the #KaraPreReleaseEvent tomorrow 🙂#KaraFromApril30

Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd @RedGiantMovies_ @Inban_U… pic.twitter.com/DCxzMCQusc

— Vels Film International (@VelsFilmIntl)

கர திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி:

2026ம் ஆண்டில் தனுஷின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக காத்திருக்கும் படம்தான் கர. மேலும் 2026ம் ஆண்டில் இப்படம் முதலில் வெளியாகும் நிலையில், தனுஷின் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். மேலும் இதில் மமிதா பைஜூவும் லீட் நாயகியாக நடித்திருக்கும் நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி எவ்வாறு மைந்திருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பை அதிகரித்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை படக்குழு ஒரே நிகழ்ச்சியாக நடத்த உள்ளதாம்.

இதையும் படிங்க: மைசா படத்திற்காக தீவிர சண்டை பயிற்சியில் ராஷ்மிகா மந்தனா – வைரலாகும் பதிவு!

அதன்படி இந்த நிகழ்ச்சியானது, 2026 ஏப்ரல் 19ம் தேதியில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தனுஷின் பேச்சிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.