30 தொகுதிகளில் க்ளீன் ஸ்வீப் செய்யும் திமுக... கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி... தவெக-வின் வாக்கு சதவீதம் எவ்வளவு?!
Dinamaalai April 18, 2026 08:48 PM

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னணி வார இதழான நக்கீரன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளன.கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது. தலைநகர் சென்னையின் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக-வின் செல்வாக்கு குறையாமல் இருப்பதாகக் கணிப்பு கூறுகிறது.

தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியைக் கொண்டுள்ள காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்களிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பின்படி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த 30 தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாகச் சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ இந்தத் தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. தவெக-வின் வாக்கு சதவீதம் 7% முதல் 16% வரை இருக்கும் என நக்கீரன் கணித்துள்ளது. குறிப்பாகச் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு தவெக-விற்குச் சாதகமாக உள்ளது.

திமுக அரசின் நலத்திட்டங்கள், மகளிர் உரிமைத் தொகை மற்றும் சென்னையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், மும்முனைப் போட்டி நிலவும் இடங்களில் வாக்குகள் பிரிவது எந்தக் கட்சிக்குச் சாதகமாக முடியும் என்பதில் தவெக-வின் பங்கு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.