தமிழகத்தில் முகவரியை இல்லாத பாஜகவுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் என்ன நிலை ஆகப் போகுது என்று பாருங்கள்; ஓசூரில் முதலமைச்சர் பரப்புரை..!
Seithipunal Tamil April 20, 2026 02:48 AM

கிருஷ்ணகிரி மாவட்டத் தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று ஓசூரில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் கூறியதாவது; திராவிட மாடல் 2.0ஆட்சி தொடர ஒட்டுமொத்த மக்களும் ஓகே சொல்லிவிட்டார்கள் என்றும், தமிழ்நாட்டின் உரிமைகளை திமுகவினால் மட்டுமே காப்பாற்ற முடியும் என நிரூபித்துவிட்டு நிற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ராகுல் காந்தி தமிழ்நாட்டில் வலிமையாக பேசிவிட்டுச் சென்றுள்ளதாகவும், மதச்சார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளதற்கு அடித்தளமாக இருப்பவர் மல்லிகார்ஜூன கார்கே என்று சுட்டிக்காட்டியதோடு, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒசூரில் ரூ.100 கோடியில் பிரம்மாண்ட மருத்துவமனை அமைத்துள்ளோம். சிறிய தொழில் நகரமாக இருந்த ஒசூரில் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் ஆலைகள் அமைத்துள்ளன. பாரூர் ஏரியில் கிழக்கு பிரதான கால்வாய் அமைத்து 33 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம்.

ஒசூர் தோழி விடுதி, புதிய பேருந்து நிலையம், புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதோடு, தொழில் முதலீடுகளால் ஒசூர் நவீன தொழில் நகரமாக மாறி வருகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு மறுக்கிறதாகவும், அதனை தட்டிக் கேட்க முடியாமல் எடப்பாடி இருக்கிறார் என்றும், தமிழ்நாட்டு உரிமைகளுக்காக குரல் கொடுக்க துணிச்சல் இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி. ஒன்றிய பாஜக அரசை தட்டிக் கேட்க துணிவில்லாத எடப்பாடி என்னை குறை கூறுகிறார் என்று விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி தோல்வி பயத்தில் அப்பட்டமான விதிமீறலில் ஈடுபடுகிறார் என்றும்,  தேர்தல் பிரச்சாரத்துக்காக பேச வேண்டிய உரை எல்லாம் தேசிய கொடிக்கு பின்னால் பேசி இருக்கிறார் என்று பிரதமரை குறை கூறியதோடு, மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டதாக அப்பட்டமான பொய் பிரச்சாரம் செய்துள்ளார் என்றும், தொகுதி மறுவரையறையை தோற்கடித்து என்.டி.ஏ. கூட்டணியை நிலைகுலைய வைத்துள்ளோம் என்று பேசியுள்ளார்.

அத்துடன், காரில் போகும்போது கிரிக்கெட் பார்த்தது தப்பு என பழனிசாமி சொல்லுகிறார். ஆனால், காரில் நீங்க கர்ச்சீப் வைத்து முகத்தை மூடிக்கொண்டு போனீர்களே அதுதான் கேவலம் என்றும் எடப்பாடியை கடுமையாக விமர்சித்துள்ளதோடு, திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் என்.டி.ஏ. கூட்டணி அத்தியாம் முடிவுக்கு வரவுள்ளதாகவும், பாஜகவுக்கு முகவரியே இல்லாத  தமிழ்நாட்டில் என்ன நிலை ஆகப் போகுது என்று பாருங்கள் என்று பேசியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.