பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil April 20, 2026 04:48 AM

||श्री:|| 

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

இன்றைய பஞ்சாங்கம் – ஏப்ரல் 20

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

சித்திரை ~ 07 ( 20.4.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் {பராபவ நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ சித்திரை மாஸம் { மேஷ மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 11.11 am வரை த்ருதீயை பின் சதுர்த்தி.
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 7.54 am வரை க்ருத்திகை பின் ரோஹினி.
யோகம் ~ ஸௌபாக்யம்.
கரணம் ~ கரஜை / வணிஜை.
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம்.
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9 to 10.30 am & 5 to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.03
சந்திராஷ்டமம் ~ துலாம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ சதுர்த்தி.
இன்று ~ அக்ஷயத்ருதீயை (11.11 am வரை)

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥

!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திங்கள் ஓரைகளின் காலம்

காலை

6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்

பிற்பகல்

12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்

மாலை

3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய (20-4-2026) ராசி பலன்கள்

மேஷம்

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் உருவாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இணைய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : அறிமுகங்கள் உருவாகும்.
பரணி : நம்பிக்கை அதிகரிக்கும்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

எதிலும் வேக இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். உத்தியோக முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும். பிற்கால வாழ்க்கை பற்றிய எண்ணம் மேம்படும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : எண்ணம் மேம்படும்.

மிதுனம்

உடலில் இருந்து வந்த சில வலிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். அனுபவம் மூலம் சில மாற்றமான முடிவுகள் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் விருத்தி உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : தீர்வுகள் கிடைக்கும்.
திருவாதிரை : மேன்மை உண்டாகும்.
புனர்பூசம் : விருத்தி உண்டாகும்.

கடகம்

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் ஒற்றுமை ஏற்படும். சிந்தனை போக்கில் மாற்றங்கள் உருவாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். இணையம் சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : ஒற்றுமை ஏற்படும்.
பூசம் : பிரச்சனைகள் குறையும்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்

மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். சமூக பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேளாண்மை சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : முன்னேற்றமான நாள்.
பூரம் : ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
உத்திரம் : வாய்ப்புகள் கைகூடும்.

கன்னி

எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் கிடைக்கும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்
அஸ்தம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
சித்திரை : குழப்பங்கள் குறையும்.

துலாம்

சமூகப் பணிகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் சிறு சிறு மன வருத்தங்கள் நேரிடும். மூத்த உடன்பிறப்புகளிடம் வீட்டுக்கொடுத்து செல்லவும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். பயணம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : வீட்டுக்கொடுத்து செல்லவும்.
விசாகம் : சேமிப்புகள் குறையும்.

விருச்சிகம்

நண்பர்கள் வட்டம் விரிவடையும். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் : மேன்மை உண்டாகும்.
கேட்டை : சோர்வுகள் நீங்கும்.

தனுசு

உணவு சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் அளவில் இருந்த மந்தத்தன்மை குறையும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். நினைவாற்றலில் இருந்த மந்தத்தன்மை குறையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : தீர்வுகள் பிறக்கும்.
உத்திராடம் : மந்தத்தன்மை குறையும்.

மகரம்

மனதில் புதுமையான சிந்தனைகள் மேம்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். முயற்சி ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : அங்கீகாரம் கிடைக்கும்.
திருவோணம் : நட்பு வட்டம் விரிவடையும்.
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கும்பம்

அரசு பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். கடன் பிரச்சனைகளில் பொறுமை வேண்டும். ஆரோக்கிய சிக்கல்கள் குறையும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நம்பிக்கை தரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

அவிட்டம் : பொறுமை வேண்டும்.
சதயம் : ஆர்வமின்மை ஏற்படும்.
பூரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

மீனம்

அக்கம்பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். பயம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.
உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.

தினம் ஒரு திருக்குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.

மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

விளக்கவுரை

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

இன்றைய சிந்தனைக்கு…

காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!

நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!

தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.