அரசியலுக்கு வந்தா பிரெஸ்ஸ சந்திக்கணும்னு ரூல்ஸ் இருக்கா?.. முட்டு கொடுக்கும் எஸ்.ஏ.சி..
CineReporters Tamil April 21, 2026 07:48 PM

பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள்.. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள். எதிர்க்கட்சிகளுக்கு தாங்கள் செல்ல வேண்டியதை செய்தியாளர்கள் மூலம் சொல்வார்கள். எதிர்க்கட்சித் தலைவருக்கு கண்டனம் தெரிவிப்பார்கள்.. அறிக்கைகளை வெளியிடுவார்கள். வெளியே எங்கு சென்றாலும் செய்தியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கேள்விகள் கேட்டால் பதில் சொல்வார்கள்.

அதற்கு சிறந்த உதாரணமாக நாம் தமிழர் கட்சி சீமானை சொல்ல முடியும். அவர் எப்போதும் செய்தியாளர்களை கண்டு ஓடியதில்லை. அவருக்கு பின் எடப்பாடி பழனிச்சாமியை சொல்லலாம். முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை மிகவும் குறைவாகவே செய்தியாளர்களை சந்திக்கிறார்.. அதிகபட்சம் சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் சொல்லிவிட்டு சென்று விடுகிறார்..

ஒருபக்கம் நடிகராக இருந்து கட்சி துவங்கிய நடிகர் விஜய் கட்சி துவங்கியதிலிருந்தே செய்தியாளர் சந்திப்பை நடத்தியதில்லை. எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் அவர் பேடி கொடுத்ததில்லை. தமிழக அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு வித்தியாசமான அரசியலை விஜய் செய்து வருகிறார். விஜய் செய்தியாளர் சந்திப்பதில்லை என்கிற விமர்சனத்தை பலரும் அவர் மீது வைக்கிறார்கள்.

ஆனால் அவர் எந்த பதிலும் சொல்வதில்லை.. செய்தியாளர்கள் கூப்பிட்டால் கூட காது கேட்காத மாதிரி சென்று விடுகிறார். இந்நிலையில், நேற்று ஒரு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ‘ஒரு அரசியல்வாதி தினமும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற ரூல்ஸ் ஏதாவது இருக்கிறதா?.. நான் தேர்தலில் நிற்கிறேன்.. எனக்கு ஓட்டு போங்கள்’ என்று கூட அவர் விளம்பரம் செய்வதில்லை.. அதை மட்டும் ஏன் நீங்கள் கேட்கவில்லை?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்..

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.