முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இருபத்தைந்தாவது ஆட்டம் கொல்கொத்தா vs குஜராத் – அகமதாபாத் – ஏப்ரல் 17
முதலில் ஆடிய கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன் எடுத்தது. இந்த மொத்த ரன் கூட காமரூன் கிரீன் எடுத்த 79 ரன்னால் (55 பந்துகள், 7 ஃபோர், 4 சிக்சர்) சாத்தியமானது. அவருக்குத்து துணையாக ரோமன் போவெல் (27 ரன்) மற்றும் ரமன்தீப் சிங் (17 ரன்) சிறிது நேரம் கம்பனி கொடுத்தார்கள். பிறர் இன்று சரியாக ஆடவில்லை. குஜராத் அணியில் ரபாடா 3 விக்கட்டுகளும், ஷமி, அஷோக் ஷர்மா தலா இரண்டு விக்கட்டுகளும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய குஜராத் அணியின் அணித்தலைவர் ஷுப்மன் கில் 50 பந்துகளில் 86 ரன் எடுத்தார். இதில் 8 ஃபோர், 4 சிக்சர்கள் அடக்கம். சாய் சுதர்ஷன் 22 ரன், ஜாஸ் பட்லர் 25 ரன், வாஷிங்க்டன் சுந்தர் 13 ரன், கிளன் பிலிப்ஸ் 19 ரன் எடுத்தனர். இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இருபத்தியாறாவது ஆட்டம் பெங்களூரு vs டெல்லி – பெங்களூரு – ஏப்ரல் 18 முதல் ஆட்டம்
முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. அந்த அணியின் பில் சால்ட் (38 பந்துகளில் 63 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார். மற்றாவர்கள் சரியாக ஆடவில்லை. குறிப்பாக விராட் கோலி 19 ரன், தேவதத் படிக்கல் 18 ரன், ரஜத் படிதார் 8 ரன், டிம் டேவிட் 26 ரன், ஜித்தேஷ் ஷர்மா 14 ரன், க்ருணால் பாண்ட்யா 12 ரன் ஆகியொர் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்கத் தவறினர். டெல்லி அணியில் நிகிடி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய டெல்லி அணியில் கே,எல், ராகுல் (34 பந்துகளில் 57 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), அக்சர் படேல் (19 பந்துகளில் 26 ரன்), டேவிட் மில்லர் (10 பந்துகளில் 22 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனால் 19.5 ஓவர்களில் டெல்லி அணி 179 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இருபத்தியேழாவது ஆட்டம் ஹைதராபாத் vs சென்னை – ஹைதராபாத் – ஏப்ரல் 18 இரண்டாவது ஆட்டம்
முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 194 ரன் எடுத்தது. அந்த அணியின் அபிஷேக் ஷர்மா 59 ரன்னும் (22 பந்துகள், 6 ஃபோர், 4 சிக்சர்), ஹென்றி கிளாசன் 59 ரன் (39 பந்துகள் 6 ஃபோர், 2 சிக்சர்), ட்ராவிஸ் ஹெட் 23 ரன்னும் (20 பந்துகள், 3 ஃபோர், 1 சிக்சர்) அடித்தனர். சென்னை அணியின் அன்ஷுல் காம்போஜ் மற்றும் ஜமி ஓவர்டன் இருவரும் தலா 3 விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 184 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. சென்னை அணியின் ஆயுஷ் மாத்ரே 30 ரன்னும் (13 பந்துகள் 5 ஃபோர், 1 சிக்சர்), மேத்யூ ஷாட் 34 ரன்னும் (30 பந்துகள், 3 ஃபோர்), சர்ஃப்ராஸ் கான் 25 ரன்னும் (19 பந்துகள், 3 ஃபோர்), ஷிவம் துபே 21 ரன்னும் (16 பந்துகள் 1 ஃபோர், 1 சிக்சர்) அடித்தனர். ஆயுஷ் மாத்ரே காலில் காயம் பட்டுக்கொண்டார். இதனால் அவர் இனி வரும் ஆட்டங்களில் அவர் ஆடுவாரா என்பது சந்தேகம். சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் 7 ரன் மட்டுமே எடுத்தார். ஹைதராபாத் அணியின் ஈஷன் மலிங்கா 3 விக்கட்டுகள் எடுத்தார். அவரே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – ஏப்ரல் 19
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி அதிரடி ஆட்டக்காரர்களை அணியில் வைத்திருந்தும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 155 ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் யசஸ்வீ ஜெய்ஸ்வால் 39 ரன்னும் (29 பந்துகள் 4 ஃபோர், 2 சிக்சர்), வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்னும் (28 பந்துகள், 6 ஃபோர், 2 சிக்சர்) எடுத்தனர். பிறர் இன்று சரியாக ஆடவில்லை. கொல்கொத்தா அணியின் கார்த்திக் தியாகி மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும் தலா 3 விக்கட் எடுத்தனர். கொல்கொத்தா அணியின் தொடக்கம் மிக மோசமாக இருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிம் செய்ஃபெர்ட் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் ரன் எடுக்காமல் முத்ல் இரண்டு ஓவர்களில் ஆட்டமிழந்தனர். மற்றொரு அதிரடி வீரர் ரகுவன்ஷியால் 19 பந்துகளில் 10 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இருப்பினும் காமரூன் கிரீன் (27 ரன்), ரொவ்மென் போவெல் (23 ரன்), ரிங்கு சிங் (34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), அங்குல் ராய் (29 ரன்) சிறப்பாக ஆடியதால் கொல்கொத்தா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 161 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து! News First Appeared in Dhinasari Tamil