தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மூத்த கட்சிகளான திமுக மற்றும் ஆதிமுக தவிர்த்து விஜயின் தவெக கட்சி இந்த தேர்தலில் களம் காண்கிறது. இதனால் முந்தைய தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாக்களிக்க சென்னை வந்து சேர்ந்துள்ளார்கள். மற்றொரு பக்கம் படப்பிடிப்பு வேலைகளை ஒத்திவைத்து நடிகர் மற்றும் நடிகைகள் வாக்களிக்க தயாராகியுள்ளார்கள். அந்த வகையில் . எந்த நடிகர் மற்றும் நடிகை எந்த வாக்குசாவடியில் எத்தனை மணிக்கு வாக்களிக்க இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
தவெக தலைவர் விஜய் ஷோலிங்கநல்லூர் தொகுதியில் நீலாங்கரையில் வாக்களிக்க இருக்கிறார். கடந்த தேர்தலில் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். இந்த முறை அதே போல் அவர் சைக்கிளில் வந்து வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை த்ரிஷா ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க இருக்கிறார்.
நடிகர் தனுஷ் ஆழ்வார்பேட்டை தொகுதியில் ஃபிரான்ஸிஸ் சேவியர் பள்ளியில் அதிகாலை வாக்களிக்க இருக்கிறார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாளை காலை 7 மணியளவில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க இருக்கிறார்
நடிகர் அஜித் குமார் வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட திருவான்மியூட் ஃபிரான்சிஸ் சேவியர் பள்ளியில் அதிகாலை 7 மணியளவில் வாக்களிக்க வருவார் என எதிர்பார்க்கலாம் .
நடிகை வரலட்சுமி சரத்குமார் நாளை காலை 11:00 மணிக்கு கொட்டூர்புரத்தில் உள்ள ஏ.எம்.எம். பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்த உள்ளார்.
நடிகை அதுல்யா நாளை காலை 11:00 மணிக்கு கோயம்புத்தூர், வடவள்ளியில் உள்ள கார்ப்பரேஷன் நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்த உள்ளார்.
நடிகர் ஜீவா நாளை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் டி. நகரில் உள்ள இந்தி பிரச்சார் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்த உள்ளார்.
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நாளை (ஏப்ரல் 23) மாலை 4:00 மணிக்கு சென்னை, டி. நகரில் உள்ள இந்தி பிரச்சார் சபாவில் தனது வாக்கைச் செலுத்த உள்ளார்.
நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி நாளை காலை 7.30 மணிக்கு கொட்டூர்புரத்தில் உள்ள கே.என்.யு.எம். பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்த உள்ளார்.
நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா நாளை (ஏப்ரல் 23) காலை 11:30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சென்னை, டி. நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் தங்களது வாக்குகளை பதிவு செய்வார்கள்.