தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் ரஜினிகாந்த். இவர் இன்று (23/04/2026) தனது ஜன நாயகக் கடமையை செய்யும் விதத்தில், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கை செய்துத்தியிருந்தார். வாக்கு செலுத்திய ரஜினிகாந்த், தனது ஆள்காட்டி விரலை காண்பித்து ஓட்டுபோட்டதாக தெரிவித்திருந்தார்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தனது வாக்கு செலுத்தும் கடமையை நிறைவேற்றும் விதத்தில், நடிகர் கமல் ஹாசன் மற்றும் அவரின் மக்கள் நடிகை ஸ்ருதிஹாசன் இருவருமே வந்து வாக்கு செலுத்தியிருந்தனர். மேலும் தனது ஜன நாயகக் கடமையை நிறைவேற்றியது குறித்து ஆள்காட்டி விரலையும் காண்பித்திருந்தனர்.
மேலும் நடிகர் சியான் விக்ரமும் தனது ஜன நாயகக் கடமையை செய்யும் விதத்தில், சட்டமன்ற தேர்தலுக்காக தனது ஓட்டை செலுத்தியிருந்தார். சோலோவாக வந்து தனது வாக்கை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாக்கு செலுத்திய அவர் தனது ஆள்காட்டி விரலை காண்பித்திருந்தார்.
மேலும் தமிழ் நடிகர்கள் கவின், சூரி, பரத், இயக்குநர் அட்லீ, இசையமைப்பாளர் அனிருத், நடிகை திரிஷா கிருஷ்ணன், தனுஷ் என பல்வேறு தமிழ் பிரபலங்கள் தங்களின் ஜன நாயகக் கடமையை நிறைவேற்றும் விதத்தில், அவர் அவர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று, தனது வாக்குகளை செலுத்தியிருந்தனர். மேலும் அனைவரும் கட்டாயம் வாக்குகளை செலுத்தவேண்டும் என பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.