தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே 50 வருடங்களுக்கும் மேல் மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில் நடிகர் விஜயின் அரசியல் வரவு தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. விஜய்க்கு இருப்பது ரசிகர்கள் மட்டுமே. அது வாக்காக மாறது என அதிமு, திமுக, பாஜக, நாதக போன்ற கட்சிகள் சொன்னது. ஆனால், அதுவெல்லாம் வாக்குகளாக மாறியிருக்கிறது என்பது வாக்குகள் வேகமாக பதிவாகி வருவதை பார்க்கும்போது தெரிகிறது. விஜயின் தவெக அதிக வாக்குகளை பெறும் என கணிக்கப்படுகிறது.
ஆனால், இன்று காலை 7 மணிக்கு சட்டமன்ற தேர்தல் தொடர்பான வாக்குப்பதிவு துவங்கியது. காலை முதலே வாக்குபதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலை 9 மணிக்கே 17.69 வாக்குகள் பதிவானது. அதேபோல் காலை 11 மணிக்கு 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. மேலும், மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது மதியம் ஒரு மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. ஆனால் தற்போது 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது 2021 சட்டமன்ற தேர்தலில் ஒப்பிடும்போது 17.2 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியிருக்கிறது.
அதேபோல், மதியம் 3 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது. அதாவது. 5.75 கோடி வாக்காளர்களில் சுமார் 4 கோடி பேர் வாக்களித்துவிட்டனர். மீது 3 நேரம் இருப்பதால் கண்டிப்பாக மொத்த வாக்கு சதவீதம் 85ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக 80 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவானாலே அது ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் என்கிற கருத்து உண்டு. இந்நிலையில், 80 சதவீதத்தை தாண்டினால் நிச்சயம் அது திமுகவுக்கு எதிராகவே அமையும் என கணிக்கப்படுகிறது. அதாவது, விஜய்க்கு அதிக சதவீத வாக்குகள் செல்ல வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.