ஒட்டுமொத்த தமிழகமே இன்று பரபரப்பாக 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக (2026 Assembly Elections) தங்களின் வாக்குகளை செலுத்திவருகின்றனர். அந்த வகையில் இன்று (23/04/2026) அதிகாலை முதலே தல அஜித் குமார் முதல் பல்வேறு உச்ச பிரபலங்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை செய்துவருகிறார்கள். தளபதி விஜய் (thalapathy Vijay), சூர்யா (Suriya), ரஜினிகாந்த் (Rajinikanth), கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல்வேறு நடிகர்களும் தங்களின் வாக்குகளை செலுத்தியிருந்தனர். மேலும் தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களின் வாக்குகளை செலுத்தியிருந்தனர். அந்த விதத்தில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan), தனது ஜனநாயகக் கடமையை சிறப்பாக செய்துள்ளார். அவர் சென்னை தியாகராயநகர் வாக்குச்சாவடியில் தனது, வாக்கை செலுத்தியுள்ளார்.
மேலும் வாக்கை செலுத்திவிட்டு, தனது ஆள்காட்டி விரலை காட்டியிருந்தார். மேலும் இவரோடு நடிகர்கள் விஷால் மற்றும் சிம்ரன் உட்பட பல்வேறு பிரபலங்களும் தங்களின் பொன்னான வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 2026 தமிழக தேர்தல்.. வாக்குகளை செலுத்திய சின்னத்திரை பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!
Atman #STR has cast his vote 👍#silambarasantr #voting pic.twitter.com/22NXhVup0D
— SALEM TALKIES (@SalemTalkies)
மேலும் தமிழ் நடிகர் விஷாலும்(Vishal) தனது வாக்கை செலுத்தியுள்ளார். அவர் தனது சைக்கிள், சென்னை அண்ணா நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று, தனது வாக்கை செலுத்தியிருந்தார். அவர் மகுடம் படத்தின் ஷூட்டிங்க்காக காக்கிநாடாவிற்கு சென்றிருந்த நிலையில், தனது ஜன நாயகக் கடமையை செய்வதற்காகவே வந்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காமெடியாக பேசியும், அனைவரும் நிச்சயமாக வாக்குகளை செலுத்தவேண்டும் என்றும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் பேசியது தொடர்பான வீடியோ:காக்கிநாடாவில் #மகுடம் படப்பிடிப்பில் இருந்து நடிகர் ஜான் விஜய்யுடன் ஓட்டு போட வரும் விஷால், விமான நிலையத்துக்கான பஸ்சில் செல்லும்போது, அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மாலை 4.30 மணிக்குள் அவர் ஓட்டு போடுகிறார்.#Vishal #TNElection2026@VishalKOfficial pic.twitter.com/daFIFDMofh— Actor Kayal Devaraj (@kayaldevaraj)
இதையும் படிங்க: தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பிரபல மலையாள நடிகர்
View this post on Instagram
A post shared by SIMRAN (@simranrishibagga)
நடிகை சிம்ரனும் (Simran) தனது வாக்கை செலுத்தியுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில் அவர், “டிராமாவை தவிர்த்து, யதார்த்தத்தில் கவனம் செலுத்துவோம். இது ஒரு வாக்குச்சாவடி, சினிமா ஷூட்டிங் அல்ல, வாக்களிக்கவரும்போது அனைவரும் ஒன்றே. வாக்களிப்பது என் உரிமை மட்டுமல்ல, அது என் பொறுப்பும் கூட” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.