“வாக்கு என்பது நமது உரிமை; ஜனநாயகக் கடமையை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்கள்” எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒரு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
“வாக்காளப் பெருமக்களுக்கு வணக்கம். நமது வாக்கு என்பது நமது உரிமை மற்றும் முக்கியமான ஜனநாயகக் கடமையாகும். எனவே, வாக்காளர்கள் எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடக் கூடாது. வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், தயவு செய்து பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். வரிசையை விட்டு விலகாமல் நின்று, உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை எவ்விதச் சூழலிலும் தவிர்க்க வேண்டாம். ஜனநாயகத்தைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. ஒரு வாக்குகூட விடுபடாமல் அனைத்து வாக்காளர்களும் பதிவு செய்து, நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும் என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.