சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்து ஜனநாயகப் பொறுப்பை நிறைவேற்றினார்.
அதனைத் தொடர்ந்து, அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டின் முன்னேற்றப் பாதையை நிர்ணயிக்கும் இன்றைய நாள் மிக முக்கியமானது.

நான் என் வாக்குரிமையைப் பதிவு செய்துவிட்டேன். ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் உரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் பதிவு செய்யும் வாக்கு ஒரு சாதாரண குறியீடு அல்ல; தமிழ்நாட்டை பாதுகாக்கும் உறுதியான கேடயம்.நாளைய தலைமுறையின் எதிர்காலம் உங்கள் விரலில் பதியும் அந்த ஒரு வாக்கில் உறைந்து கிடக்கிறது.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, சமத்துவம், சமூகநீதி போன்ற உயரிய மதிப்புகளை காக்கும் ஆற்றலுடன் உங்கள் வாக்கு அமைய வேண்டும்.
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெற்றியை நிர்ணயிக்கும்; நாம் ஒன்றிணைந்து வெல்வோம்” என உறுதியுடன் தெரிவிக்கப்படுள்ளது.