சட்டசபை தேர்தல்!.. மதியம் 1 மணி நிலவரப்படி 56.81 வாக்கு சதவீத வாக்குப்பதிவு!..
Webdunia Tamil April 23, 2026 06:48 PM


தமிழக சட்டசபை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கவுள்ளனர். தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சையாக வேட்பாளர்கள் என எல்லாம் சேர்த்து 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் இந்த முறை போட்டியிடுகிறார்கள்.

வழக்கமாக அதிமுக, திமுக இடையே மட்டும் போட்டி நிலவும் நிலையில் இந்த முறை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அவரின் தவெக இந்த முறை வாக்குப்பதிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் பொதுமக்கள் வாக்களித்து வருகிறார்கள். பொது மக்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 9 மணி வரை 17.69 சதவீத வாக்குகள் பதிவானது. அதன்பின் காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் மதியம் ஒரு மணி நேரப்படி தமிழகத்தில் 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது..

பொதுவாக 1 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு மந்தமாக இருக்கும். ஆனால் இந்த முறை அந்த நேரத்திலும் அதிக வாக்குகள் பதிவாகும் என கணிக்கப்படுகிறது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.