ஆரோக்கியத்துக்கு இளநீரை எப்படி குடிக்கணும் தெரியுமா ?
Top Tamil News May 01, 2026 07:48 AM

பொதுவாக பலர் பீருக்கும் பிராந்திக்கும் அதிக செலவு செய்து உடலை கெடுத்து கொள்கின்றனர் .இந்த மதுவுக்கு செலவு செய்யும் பணத்தில் ஒரு பகுதியை இளநீர் குடிக்க செலவு செய்தால் உடல் ஆரோக்கியம் பெருகும் .அதனால் இளநீர் குடிப்பதால் உண்டாகும் நண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
 
1.இம்மியூனிட்டி பவர் குறைவாக இருப்போர் இளநீர் குடிக்கலாம் .அதை குடிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. 
2.இளநீர் குடிப்பது உடலின் நீர்சத்தை குறிப்பிட்ட அளவில் வைத்து கொள்கிறது.
3.இளநீர் குடிப்பது உடலில் உள்ள சத்துகளை முழுவதுமாக இயங்க செய்வதற்கும், புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்வதற்கும் உதவுகிறது.
4.உடற்பயிற்சி செய்பவர்கள் இளநீர் அருந்துவதை, அன்றாட பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
5.ஒரு இளநீரில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகள் மிகுதியாக உள்ளன. இதனால், இரத்த அழுத்தம், இருதயம் தொடர்பான நோய்கள் வராது 
6.பொதுவாக இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள இளநீர்  உதவும் 
7.இளநீர் குடிப்பது உடலின் நல்ல கொழுப்பை அதிகரித்து விடும் இது , உடல் இயக்கத்தை சீர் செய்கிறது.
8.இளநீரில் பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால், சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது.
9.இளநீர் குடிக்கும் பலர், தண்ணீரை மட்டும் குடித்து விட்டு உள்ளே இருக்கும் இளசான தேங்காயை அப்படியே விட்டு விடுகின்றனர். 
10..தண்ணீருக்கு இணையான சத்து, இந்த இளம் தேங்காயிலும் உள்ளதுஎன்பதால் இளநீர் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.