இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலான மற்றும் ஆபத்தான வேலைகளில் ஒன்றாக உணவு டெலிவரி செய்யும் பணி மாறி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், வீடுகளுக்கு டெலிவரி செய்யச் செல்லும் ஊழியர்களை, அங்கு வளர்க்கப்படும் நாய்கள் மிகவும் ஆக்ரோஷமாகத் துரத்துவதும், கடிக்கப் பாய்வதும் பதிவாகியுள்ளது. எதிர்பாராத நேரத்தில் பாயும் இந்த நாய்களிடமிருந்து தப்பிக்க ஊழியர்கள் உயிரைப் பணையம் வைத்து ஓடுவதைக் காண முடிகிறது.
இந்தக் காணொளியைப் பகிரும் பலரும், டெலிவரி வேலை என்பது நாம் நினைப்பது போல எளிதானது அல்ல, அதுவும் ஒரு ஆபத்தான வேலைதான் என்று குறிப்பிட்டு வருகின்றனர். நேரம் கடந்துவிடக் கூடாது என்ற பதற்றத்திற்கு இடையே, இது போன்ற செல்லப் பிராணிகளின் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது ஊழியர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.