கிரெடிட் கார்டு கடனை உரிய தேதியில் திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் அது குறித்து நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆர்பிஐ வெளியிட்ட புதிய விதிகளின் படி , கட்டணம் செலுத்த வேண்டிய தேதிக்கு பின்னரும் உங்களுக்கு இனி 3 நாட்கள் கூடுதல் அவகாசம் என்பது கிடைக்கும். இந்த 3 நாட்கள் அவகாச காலத்தில் வங்கிகளுக்கு உங்களுக்கு எந்த அபராதமும் விதிக்காது.
சில சமயங்களில் கடனை திரும்ப செலுத்தும் தேதியை தவறவிட்டால் அடுத்த நாளே செலுத்தினாலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அதற்கு நிவாரணம் கிடைத்துள்ளது. அதாவது கட்டணம் செலுத்தும் தேதியை தவறவிட்டாலும் அடுத்த 3 நாட்கள் அவகாசம் கிடைக்கும். அதற்குள் தாமத கட்டணம் அபராதம் ஏதும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு பில்லை செலுத்தலாம்.
உதாரணமாக, உங்கள் உரிய தேதி 5ஆம் தேதி என்றால் நீங்கள் 8ஆம் தேதி வரை எந்தவித அபராதமும் இல்லாமல் பணம் செலுத்தலாம். ஒருவேளை இதனையும் தவறவிட்டவர்களுக்கு முழு கட்டணத் தொகைக்கும் அல்லாமல், செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்கு மட்டுமே தாமத கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த புதிய கிரெடிட் கார்டு விதிகள் 2027 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், இனி தாமதக் கட்டணம் முழு கட்டணத் தொகைக்கும் அல்லாமல், செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்கு மட்டுமே விதிக்கப்படும். இது வாடிக்கையாளர்கள் மீதான கூடுதல் நிதிச் சுமையைக் குறைத்து, பணம் செலுத்துவதை எளிதாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், மூன்று நாள் காலக்கெடுவிற்குப் பிறகும் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தால், அது நிலுவையில் உள்ளதாகக் கருதப்படும். இது உங்கள் கடன் மதிப்பீட்டை எதிர்மறையாகப் பாதிக்கலாம். எனவே சரியான நேரத்தில் பணம் செலுத்துவது முக்கியம்.