தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு நிர்வாகத் திறனற்ற முறையில் செயல்படுவதால் மக்கள் கடும் வெறுப்பில் இருப்பதாகவும், தோல்வி பயத்தால் திமுகவினர் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “திமுக புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறது” என்று அவர் தனது அறிக்கையில் நேரடியாகச் சாடியுள்ளார்.
மேலும், “தீயசக்தி திமுக மீண்டும் தலைதூக்கிவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமை” என்று குறிப்பிட்ட அவர், ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க அனைவரும் விழிப்புடன் இருந்து மக்கள் வழங்கிய தீர்ப்பைப் பாதுகாக்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கும் முகவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே ஆளுங்கட்சி மீது இபிஎஸ் இத்தகைய பகீர் புகாரை முன்வைத்திருப்பது தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.