Ajith Kumar: அதுதான் எனது ஆசை.. ஆனால் டைமே கிடைக்கவில்லை – அஜித் குமார் சொன்ன சுவாரஸ்ய விஷயம்!
TV9 Tamil News May 01, 2026 12:48 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்துவருகிறார். இதுவரை இவரின் நடிப்பில் 63 திரைப்படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது. அதிலும் இறுதியாக இவரின் நடிப்பில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அஜித் குமாரின் நடிப்பும் அருமையாகவே இருந்தது. கடந்த 2025ம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து அஜித் குமாருக்கு ஹிட் கொடுத்திருந்தது. இப்படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து அஜித், கார் ரேஸ் போட்டிகளில் (Car Racing) இறங்கிவிட்டார்.

கிட்டத்தட்ட 7க்கும் மேல் சர்வதேச கார் ரேஸில் (international car race) கலந்துகொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அந்த வகையில் இன்னும், தனது கார் ரேஸ் போட்டிகளுக்காக பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அஜித் குமார், தனக்கு பிடித்தும் நேரமில்லாத காரணத்தால் செய்யமுடியாமல் போன விஷயங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித் குமார் பர்த்டே ஸ்பெஷல்… தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸான படங்களின் லிஸ்ட் இதோ

தனக்கு பிடித்த விஷயம் குறித்து பகிர்ந்த நடிகர் அஜித் குமார்:

அந்த நேர்காணலில் பேசிய அஜித் குமரன், “நான் ரொம்பவே வெளிப்படியான நபர். எனக்கு இயற்கை ரொம்பவே பிடிக்கும். தூரமான பயணங்கள் போகவேண்டும் என ரொம்பவே ஆசைப்படுவேன். எனக்கு தற்போது ரொம்பவே குறைவான ஹாபிஸ் மட்டுமே இருக்கிறது. சினிமாவில் எப்போது நுழைந்தேனோ, அதிலிருந்து எனக்கான நேரம் பெரிதாக கிடைக்கவில்லை. படத்தின் ஷூட்டிங்கிலிருந்து ஒருநாள் லீவ் கிடைத்தாலே, வீட்டிற்கு சென்று தூங்கவேண்டும், சோர்வாக இருப்பதுபோலவே இருக்கும்” என அதில் வர தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரசிகர்களே தயாரா? ஸ்பாட்டிற்கு சென்று ஆய்வு செய்யும் அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!

அஜித் குமாரின் கார் ரேஸ் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

Keep calm and race on…🏁🏎️ #AjithKumarRacing #AjithRedantRacing #ajith @Akracingoffl pic.twitter.com/95oVgVaRep

— Ajithkumar Racing (@Akracingoffl)

நடிகர் அஜித் குமார் தற்போது, படங்களில் நடிப்பதை விட கார் ரேஸ் போட்டிகளில் பங்குபெறுவதில் ஆர்வமாக இருக்கிறார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ரேஸ் பயிற்சியில் இருக்கிறார். துபாய், மலேசியா, பெல்ஜியம் மற்றும் இத்தலை என பல்வேறு நாடுகளில் நடந்த சர்வதேச போட்டிகளில், இந்தியாவின் சார்பாக தனது அணியுடன் கலந்துகொண்டு பல வெற்றிக்கோப்பைகளை பெற்றுள்ளார். அந்த வகையில் இவர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் 64வது படத்தில் இணைவதாக கூறப்பட்ட நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.