தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
TV9 Tamil News May 05, 2026 01:48 AM

தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போது ஒரு பெரிய புரட்சி ஒன்று நடந்துள்ளது என்றே சொல்லலாம். பல ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்துக்கொண்டு இருந்த கட்சிகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி புதிதாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிட்ட தளபதி விஜய் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்று தனிப்பெரும்பான்மையை பிடித்துள்ளது. இது ஒட்டுமொத்த தமிழக கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எந்த கட்சிகளுடனும் கூட்டணியே இல்ல்லாமல் தனித்து நின்று விஜய் வெற்றிப் பெற்றது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வெற்றிக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் தமிழ் பிரபலங்கள் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னனி பிரபலங்களாக உள்ள பலர் தங்களது வாழ்த்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தளபதி விஜய் மற்றும் அவரது கட்சியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். இது தற்போது வைரலாகி வருகின்றது.

தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:

அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அன் ஆர்டினரி மேன் படத்திலிருந்து வைரலாகும் பிடிஎஸ் வீடியோ!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு:

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ

— Rajinikanth (@rajinikanth)

Also Read… ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் குயின்.. தற்போது ஒரு குழந்தைக்கு தாய்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி எந்த நடிகை தெரியுமா?

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.