விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் ராகுல் காந்தி? வெளியான தகவல்
TV9 Tamil News May 06, 2026 09:48 PM

சென்னை, மே 6 : தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஆட்சியமைக்க பெரும்பாண்மையை நிரூபிக்க அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் ஆட்சியமைப்பதற்காக தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். இதனையடுத்து விஜய்யின் பதவியேற்பு விழா மே 7, 2026 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 11 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

விஜய்யின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி?

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ள விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து காங்கிரஸ் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. தமிழக சட்டமன்ற தேர்தலின்போது திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில் ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின் ஒன்றாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : எடப்பாடியுடன் தவெக பொதுச்செயலர் ஆனந்த் சந்திப்பு? ஆதரவு அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை!

தற்போது தவெக அதிமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஆதரவளிக்க கோரிக்கை விடுத்து வருகின்றன. தற்போது அதிமுக முக்கிய நிர்வாகிகள் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்த நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது.  அதே நேரம் காங்கிரஸ் தற்போது தவெகவுக்கு ஆதரவளித்துள்ளதால், அதிமுக இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியே வந்தால் மட்டுமே அதிமுகவால் தவெகவுடன் கூட்டணி அமைக்க முடியும். அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என கூறப்படுகிறது.

இந்த நிலையில்  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  மே 6,  2026 அன்று காலை 11.30 மணியளவில்  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வராக பதவியேற்கவிருக்கிறார்.  அவருடன் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்களாக பொறுப்பேற்கவிருக்கின்றனர். இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்த முதற்கட்ட பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க :திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிவு.. உள்ளாட்சி முதல் மக்களவை வரை தவெகவுடன் கூட்டணி என காங்கிரஸ் உறுதி!

அதன் படி அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், திருப்பூர் சத்தியபாமா, விஜயலட்சுமி, அருண்ராஜ், விஜய் சரவணன், தமிழன் பார்த்திபன், முகமது பர்வேஸ், கல்லாணை ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.