TVK Supporter Arrested: தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
உறவினர் வீட்டிற்கு வந்த சிறுமி:
10-Year-Old Girl Assault: சென்னையில் உள்ள மைலாப்பூர் பகுதியில் வசித்து வரும் 10 வயதுடைய சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர்.கே. நகர் பகுதி, காசிமேடு, சிங்காரவேலன் நகரில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடி இருக்கிறார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை வீட்டுக்கு அழைத்து பாதிரியாரின் பகீர் செயல்.. போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!
பாம்பு தினேஷின் அதிர்ச்சி செயல்:
இதனிடையே, சிறுமியை அதே அப்பகுதியில் வசித்து வரும் தினேஷ் என்ற பாம்பு தினேஷ் அழைத்து இருக்கிறார். சிறுமியை தன்னுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்ற தினேஷ் (வயது 40), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவதாக மிரட்டி இருக்கிறார்.
காவல்துறை விசாரணை:
இந்த சம்பவத்துக்குப்பின் வீட்டுக்கு திரும்பிய சிறுமி சித்தியிடம் கூறி இருக்கிறார். இதனையடுத்து, உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மே 03ம் தேதி காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ராயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தவெக நிர்வாகி:
தொடர்ந்து, மே 04ம் தேதி அதிகாரிகள் தினேஷை கைது செய்ய முயற்சிக்கையில், தவெக சார்பில் ஆர்.கே நகர் தொகுதி தவெக வேட்பாளர் மரியான் வில்சனுடன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்ததால் கைது செய்ய இயலவில்லை. தொடர்ந்து, நேற்று இரவில் தினேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஆர்.கே. நகர் 43வது வார்டு தவெக வட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலைக்கு வந்த இடத்தில்.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சென்னையில் திடுக் சம்பவம்.!