வெயில் காலத்தில் முட்டையை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு மாதத்துக்கு முட்டை வாங்குறீங்களா?
நாம் தினமும் சாப்பிடும் முட்டை புரதச்சத்தின் சிறந்த மூலதனம் ஆகும். இதனை பலரும் காலை உணவாக எடுத்துக்கொள்வார்கள். ஒருசிலர் அதிகளவு முட்டைகளை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வார்கள். ஒருசிலநேரம் முட்டை கடையிலோ, வீட்டிலோ காலாவதி ஆகிவிடும். ஒருமாதத்துக்கு தேவையான முட்டையை நாம் ஒரேயொரு முறை வாங்கி பயன்படுத்துகிறோம் என்றால் அப்போது கவனமாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: பிரிட்ஜில் சிக்கன், மட்டன் சேமிக்கலாமா?.. எத்தனை நாள் வரை கெடாமல் இருக்கும்?.. இந்த விஷயத்தை நோட் பண்ணுங்க.!
கெட்டுப்போவது எப்படி?
பொதுவாகவே உணவில் நஞ்சை ஏற்படுத்தும் சால்மோனெல்லா பாக்டீரியா முட்டையையும் கெட்டுப்போக வைக்கிறது. காலம் அதிகமானால் பாக்டீரியா அதிகரித்து முட்டை கெட்டுப்போகும். முட்டையின் தரமும் குறையும். மஞ்சள் கரு, வெள்ளைக்கரு மெலிதாகும். முட்டையின் காற்றுப்பை விரிவாகி முட்டை கெட்டுப்போகும்.
பாதுகாப்பது எப்படி?
ஓடுகளுடன் இருக்கும் முட்டையை நாம் 3 முதல் 5 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். அதனை நேரடியாக பிரீசர் செய்யக்கூடாது. இவ்வாறு செய்தால் காலப்போக்கில் அதன் தரம் குறைந்துவிடும். முட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவது அது கெட்டுபோனதை உறுதி செய்யும். முட்டையை நீரில் இடும்போது, அது மிதந்தால் கெட்டு இருக்கலாம். முட்டையின் மஞ்சள் கரு நிறமாற்றமும் கெட்டுப்போன அறிகுறியாகும். முட்டையை குளிர்சாதன பெட்டியில் பாத்திரம் அல்லது டப்பாவில் இட்டு 2 முதல் 4 வாரம் வரை பயன்படுத்திக்கொள்வது நல்லது.
வெயில் காலத்தில் முட்டையை வாங்கி சாதாரணமாக இருப்பு வைப்பது அதனை கெட்டுப்போக வைக்கலாம் என்பதால் கவனத்துடன் இருக்கவும்.
இதையும் படிங்க: Cauliflower: காலிப்ளவர் வாங்கும்போது இந்த விஷயத்தை கவனிக்க மாந்துடாதீங்க.. இல்லத்தரசிகளே நோட் பண்ணுங்க.!