தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ்; 'ஈரம் காயாத கையால் நெரிபட்டு மரணித்தது அரசியல் நெறி' என விமர்சித்துள்ள ஆ.ராசா..!
Seithipunal Tamil May 07, 2026 03:48 AM

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்முதலில் களமிறங்கிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 இடங்கள் தேவை என்பதால் தொங்கு சட்டசபை அமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், திமுக கூட்டணியுடன் பல வருடங்களாக இருந்த காங்கிரஸ் தவெக ஆதரவு தெரிவித்து, திமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. இதனால் திமுகவினர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'ஈரம் காயாத கையால் நெரிபட்டு மரணித்தது அரசியல் நெறி மட்டுமல்ல; அவசியமான அடிப்படை நாகரிகமும் தான்' என்று திமுக எம்.பி ஆ.ராசா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது; 'ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது 'அரசியல் நெறி' மட்டுமல்ல; அவசியமான ‘அடிப்படை நாகரிக’மும் தான். வாழ்க ஜனநாயகம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சியமைக்க11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிற நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை விஜய் கோரியிருந்தார். இதனையடுத்து திமுகவுடனான உறவை முறித்துக்கொண்ட காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் காரணமாக காங்கிரஸின் 05 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.