பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil May 07, 2026 03:48 AM

|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இன்றைய பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் | 06.5.2026 | புதன்கிழமை

சித்திரை ~ 23 { 6.5.2026 } புதன் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் {பராபவ நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாதம் { மேஷ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ காலை 6.35 am வரை சதுர்த்தி பின் பஞ்சமி.
நாள்~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 2.32 PM வரை மூலம் பின் பூராடம்.
யோகம் ~ ஸித்தம்
கரணம் ~ பாலவம் / கௌலவம்.
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம்
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 am and 2.00 to 3.00 pm
சூரியஉதயம் ~ காலை 5.56.
சந்திராஷ்டமம் ~ வ்ருஷபம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ பஞ்சமி.
இன்று ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
  !!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
  !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஹோரை புதன்கிழமை

காலை

6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்

பிற்பகல்

12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்

மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

thiruvalluvar deivapulavar

இன்றைய (06-5-2026) ராசிபலன்கள்

மேஷம்

வியாபார பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். தந்தையிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். தொலைதூர பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். புதுவிதமான சிந்தனைகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரிஷபம்

மாணவர்களுக்கு குழப்பங்கள் தோன்றி மறையும். உடற்பயிற்சி விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உழைப்பு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரப் பணிகளில் கவனம் வேண்டும். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். இறை பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : ஆர்வமின்மை உண்டாகும்.

மிதுனம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்கு வரும். மனதில் இருந்த கவலைகள் குறையும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். காணாமல் போன சில பொருள்கள் கிடைக்கும். வர்த்தக துறையில் மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.
திருவாதிரை : ஆதாயம் ஏற்படும்.
புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.

கடகம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணி நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். அரசால் அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : அனுகூலம் ஏற்படும்.

சிம்மம்

நிதானமான பேச்சுகள் மூலம் நன்மதிப்புகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

மகம் : மதிப்புகள் உண்டாகும்.
பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரம் : வருத்தம் நீங்கும்.

கன்னி

பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். கால்நடை பணிகளில் மேன்மை உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலைகளில் எதிர்பார்த்த சூழல்கள் அமையும். உயர்கல்வியில் இருந்த குழப்பம் விலகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : அலைச்சல் அதிகரிக்கும்.
அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை : குழப்பம் விலகும்.

துலாம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கிய செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

சித்திரை : மாற்றம் உண்டாகும்.
சுவாதி : எதிர்ப்புகள் விலகும்.
விசாகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

விருச்சிகம்

விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் உண்டாகும். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். சமுக பணிகளில் மாறுபட்ட சூழல் ஏற்படும். பேச்சுகளுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : ஆர்வம் உண்டாகும்.
அனுஷம் : மாறுபட்ட நாள்.
கேட்டை : அனுபவம் கிடைக்கும்.

தனுசு

நினைத்த பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். அரசு செயல்களில் சிந்தித்து செயல்படவும். தற்பெருமையான சிந்தனைகளை குறைத்துக்கொள்ளவும். உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : சிந்தித்து செயல்படவும்.
பூராடம் : பொறுமை வேண்டும்.
உத்திராடம் : வேறுபாடுகள் நீங்கும்.

மகரம்

அரசு பணிகளில் அலைச்சல் உண்டாகும். பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். செய்தொழிலில் விவேகம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : அலைச்சல் உண்டாகும்.
திருவோணம் : விமர்சனங்கள் நீங்கும்.
அவிட்டம் : வரவுகள் கிடைக்கும்.

***❤️

கும்பம்

தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். தம்பதிகளுக்கு நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். பணிகளில் இருந்த இழுபறியான சூழல்கள் மறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : லாபகரமான நாள்
சதயம் : குழப்பங்கள் விலகும்.
பூரட்டாதி : இழுபறிகள் மறையும்.

மீனம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். நெருக்கடியான பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

பூரட்டாதி : பக்குவம் பிறக்கும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : பிரச்சனைகள் குறையும்.

தினம் ஒரு திருக்குறள் thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

இன்றைய பொன்மொழி

ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்

மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்

ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.

தினசரி. காம்

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

விளக்கவுரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

இன்றைய சிந்தனைக்கு…

பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.