வருமானத்தை மறைத்ததாக விஜய் மீது மோசடி வழக்கு!. நீதிமன்றம் அதிரடி!...
Webdunia Tamil May 07, 2026 05:48 PM


தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் நடித்து தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் விஜய். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி விஜய் அரசியல்வாதியாகவும் மாறினார். அதோடு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவரின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. அதேநேரம் ஆட்சி அமைக்க தேவையான ஆதரவு எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலையில் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது..

எனவே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி விஜய் தனது சட்ட ஆலோசகர்களுடனும், முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து வருகிறார். அனேகமாக தவெகவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடும்படி அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் விஜய் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அதாவது விஜய் நடித்து 2015 ஆம் வருடம் வெளியான புலி திரைப்படத்திற்கான வருமானத்தை மறைத்ததாக குற்றம் சாட்டி தவெக தலைவர் விஜய் மீது மோசடி வழக்கு பதிவு செய்யக்கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு பல வருடங்களாகவே நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது பொறுப்பிடத்தக்கது..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.