சூர்யா நடிப்பில் வருகிற 14ம் தேதி வெளியாக உள்ள படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவுடன் திரிஷா, லப்பர் பந்து சுவாசிகா, நட்டி , யோகிபாபு மற்றும் ஆர்.ஜே பாலாஜி என பலர் நடித்துள்ளனர். நீண்ட வருடங்களாகவே வெற்றிக்காக போராடும் சூர்யாவுக்கு இந்த படம் நிச்சயம் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இப்படத்தின் இயக்குனரும் கருப்பு நிச்சயம் கில்லி, படையப்பா போன்று கதை அம்சம் உள்ள படம் என்று கூறியுள்ளதால் படம் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
சமீபத்தில் இப்ப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. ஆனால் விழாவில் அப்படத்தின் நாயகி திரிஷா கலந்துகொள்ளவில்லை என்பப்து குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கோவை அன்னுரில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார் சூர்யா. அங்கு தரிசனம் முடிந்து தனது உறவினர்களுடன் சூர்யா பேசிகொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.