ஜி.பி.முத்து மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல்- 7 பேர் மீது வழக்குப்பதிவு
Top Tamil News May 10, 2026 06:48 PM

நடிகர் ஜி.பி.முத்து மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியை சேர்ந்த ஜிபி.முத்து. டிக் டாக் மூலம் அறிமுகமாகி தற்போது அவர் பல்வேறு சினிமாக்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நேற்றைய தினம் ஜிபி முத்துவின் இடத்தில் உள்ள முள்செடிகள் அந்த வழியாக செல்பவர்கள் மீது விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த சிலர் அதை வெட்ட முயற்சித்தனர். இதில் முள்செடிகளை வெட்டியவருகளுக்கும் ஜிபி முத்துவின் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. அந்த தகராறு கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.


இந்த மோதலில் இரு தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் ஜிபி முத்து அளித்த புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.அதேபோல் எதிர் தரப்பினர் அளித்த புகாரின்பேரில் ஜிபி முத்து,  அவரது மனைவி அஜிதா, தந்தை கணேசன் உள்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.