#BIG NEWS : திமுக சட்டசபை தலைவராக உதயநிதி தேர்வு..!
Top Tamil News May 10, 2026 11:48 PM

திமுக சட்டசபை தலைவராக உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த திமுக வெறும் 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தோல்வியை சந்தித்தார். அதுமட்டுமில்லாமல், கடந்த முறை அமைச்சராக இருந்த 31 பேரில் 15 பேர் தோல்வியடைந்தனர். துணை முதல்வராக இருந்த உதயநிதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.


இந்த நிலையில், திமுக சட்டசபை தலைவராக உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக நேருவும், கொறடாவாக எ.வ.வேலுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விஜய் தலைமையிலான தவெக அரசு நாளை மறுநாள் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க உள்ள நிலையில், திமுக சட்டசபை தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.