நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனாலும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை பெற முடியாததால் , ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இதனால் கடந்த நான்கு நாட்களாக தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபர்ரப்பு ஏற்பட்டது. யார் விஜய்க்கு ஆதரவு தருவார்கள் என்ற எதிர்பர்ப்பு எகிறியிருந்தது.
இந்த சூழ் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அந்த இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பலராலும் பகிரப்பட்டது. அதே நேரம் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. இது அரசியல் வட்டாரம் மட்டுமின்றி தமிழக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இதனை வைத்து சிலர் இவர்கள் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு ரஜினி தான் காரணம் என்று செய்திகளை பரப்பினர்.
இந்த நிலையில் ரஜினியின் மேனேஜர் ரியாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவ்ர் கூறுகையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் மதிப்பிற்குரிய மு.க ஸ்டாலின் அவர்களும் 42 ஆண்டு கால நண்பர்கள் . நட்பு ரீதியா திரு ஸ்டாலின் சார் அவர்களை சந்தித்தார் .இதுலே எந்த அரசியலும் இல்லே . இதை மீடியா தேவையில்லாமே வேறே மாதிரி எதையும் பரப்பாதீங்க என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று ப்பதிவிட்டுள்ளார்.