“வெட்கக்கேடு!”… ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்… முகம் சுளிக்க வைக்கும் வைரல் காட்சி..!!!!
SeithiSolai Tamil May 11, 2026 01:48 AM

ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் முதியவர் ஒருவர் மிக மோசமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

ரயிலில் ஒரு பெண் உறங்கிக்கொண்டிருந்த போது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு முதியவர், அந்தப் பெண்ணின் தனிப்பட்ட இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அநாகரிகமான முறையில் உரசுவதும், தொடுவதுமாக இருந்துள்ளார்.

அவர் தானும் தூங்குவது போல நடித்துக்கொண்டே அந்தப் பெண்ணிடம் சில்மிஷங்களில் ஈடுபட்டது அங்கிருந்த பயணிகளால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், “வயதான காலத்திலும் இப்படி ஒரு புத்தியா?” என நெட்டிசன்கள் அந்த முதியவரைச் சாடி வருகின்றனர்.

பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே நீடிப்பதாகக் குமுறும் சமூக ஆர்வலர்கள், ரயில்களில் சிசிடிவி கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், இதுபோன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.