திமுக சட்டமன்றக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு – வெளியான அறிவிப்பு
TV9 Tamil News May 10, 2026 11:48 PM

சென்னை, மே 10 : தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து கடந்த மே 4, 2026 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று பிற அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. கடந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு 2வது இடமே கிடைத்தது. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுக சட்டமன்றக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மே 10, 2026 அன்று தமிழக முதலவராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், செங்கோட்டையன், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா தேர்வு செய்யப்பட்டார். அவர் மக்கள் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

இதையும் படிக்க :  “தமிழ்த்தாய் வாழ்த்து முதல் மக்கள் முன் முதல் கையெழுத்து வரை”.. உறுதிமொழியேற்பு விழாவில் நடந்த மாற்றங்கள்!!

திமுக வெளியிட்ட அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/Spz98kJHvH

— DMK (@arivalayam)

இதனையடுத்து தமிழக சட்டமன்றம் மே 11, 2026 அன்று நாளை கூடுகிறது. இந்த சட்டமன்ற கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏகளுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவியேற்பு செய்து வைக்கிறார். இந்த நிலையில் திமுக திமுக சட்டமன்றக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். அவருடன் துணைத் தலைவராக கே.என்.நேருவும், கொறடா எ.வ.வேலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து  உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராகிறார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்ட வி.எஸ்.பாபுவிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார்.  இதனால் அவரால் சட்டமன்றத்துக்கு வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.  இதன் காரணமாகவே சென்னை திருவல்லிக்கேனி தொகுதியில் வென்ற உதயநிதி ஸ்டாலின் தற்போது எதிர் கட்சித் தலைவராக செயல்படவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : CM Vijay speech: நிதி எவ்வளவு? தமிழ்நாடு அரசின் நிலைமை என்ன? வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என உறுதியளித்த முதல்வர் விஜய்!

தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக மே 10, 2026 அன்று பதவியேற்றுக்கொண்டார். பின்னர் பேசிய அவர், இன்றைய தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துச் சென்றுள்ள, கஜானாவா சுத்தமா துடைச்சு வச்சிட்டு போயிருக்க, தூக்க முடியாத சுமையை வைச்சிட்டு போயிருக்க நிலையில் தான் பொறுப்பை கையில் எடுத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும் ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு’ என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது என்று தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.