IPL 2026: ஆரஞ்சு கேப் பட்டியல்.. டாப் 10ல் இருந்து வெளியேறிய விராட் கோலி.. யார் முதலிடம்?
TV9 Tamil News May 13, 2026 09:48 PM

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 மே 13ம் தேதி நடைபெற்ற போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்குப் பிறகு, ஆரஞ்சு கேப்பிற்கான போட்டியில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதேநேரத்தில், ஐபிஎல் 2026 சீசனில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் டாப் லிஸ்டில் இருந்த விராட் கோலி பின் தங்கியுள்ளார். ஐபிஎல் 2026 சீசனின் 56-வது போட்டிக்குப் பிறகும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹென்ரிக் கிளாசன் ஆரஞ்சு கேப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த சீசனில் 12 போட்டிகளில் 12 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஹென்ரிக் கிளாசன், 50.80 சராசரி மற்றும் 153.94 ஸ்டிரைக் ரேட்டுடன் 508 ரன்கள் எடுத்துள்ளார்.

ALSO READ: அணியுடன் லக்னோவிற்கு கிளம்பும் தோனி.. சிஎஸ்கே CEO கொடுத்த ஹிண்ட்!

சாய் சுதர்ஷன் அதிரடி முன்னேற்றம்:

குஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் தொடக்க வீரரான சாய் சுதர்ஷன், ஆரஞ்சு கேப் போட்டியில் 2வது அதிக ரன்கள் எடுத்தவராக திகழ்கிறார். ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சாய் சுதர்சன் அடித்த 61 ரன்கள், அவரை 501 ரன்களை எட்ட வைத்துள்ளது. ஐபிஎல் 2026 சீசனில் சாய் சுதர்சன் இதுவரை 12 இன்னிங்ஸ்களில் 41.75 சராசரி மற்றும் 155.11 ஸ்டிரைக் ரேட்டில் 501 ரன்கள் எடுத்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 12 இன்னிங்ஸ்களில் 481 ரன்கள் எடுத்து 2வது இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மூத்த வீரர் லோகேஷ் ராகுல் 477 ரன்களுடன் 4வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் 11 இன்னிங்ஸ்களில் 467 ரன்களுடன் முதல் 5வது இடத்திலும் உள்ளார்.

டாப்-10 பட்டியலில் இருந்து வெளியேறிய வைபவ் சூர்யவன்ஷி:

ஆரஞ்சு கேப்க்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 6வது இடத்தில் உள்ளார். வைபவ் சூர்யவன்ஷி 11 இன்னிங்ஸ்களில் 440 ரன்கள் மற்றும் 236 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் அசத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் 430 ரன்களுடன் 7வது இடத்தில் உள்ளார். சஞ்சு சாம்சன் 53.75 சராசரியையும் 169.29 ஸ்டிரைக் ரேட்டில் கலக்கி வருகிறார்.

ALSO READ: டேபிள் டாப்பராக GT, RCB.. CSK, KKR பிளே ஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இஷான் கிஷன் 420 ரன்களுடன் 8வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கூப்பர் கானலி 415 ரன்களுடன் 9வது இடத்தில் உள்ளார். தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 392 ரன்களுடன் பத்தாவது இடத்தில் நீடிக்கிறார். இதற்கிடையில், விராட் கோலிக்கு ஒரு பெரிய பின்னடைவை சந்தித்தது மட்டுமின்றி, தற்போது முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறியுள்ளார். விராட் கோலி 11 இன்னிங்ஸ்களில் 379 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் தற்போது ஆரஞ்சு கேப் தரவரிசையில் 13வது இடத்திற்குச் சரிந்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.