தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையிலான ‘எக்ஸ்’ தளப் போர் தற்போது ‘சோஃபா செட்’ விவகாரத்தால் ரணகளமாக மாறியுள்ளது.
2006-ம் ஆண்டு அமைந்த திமுக ஆட்சியை முதலமைச்சர் விஜய் விமர்சித்ததற்குப் பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், “2006 திமுக ஆட்சி என்பது உங்களைப் போல எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கியோ அல்லது சோஃபா செட் அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அல்ல” எனப் போட்டுத் தாக்கியுள்ளார்.
முழுக்க முழுக்க திமுக கூட்டணிக் கட்சிகளின் வெளிப்படையான ஆதரவோடும், மக்களின் பேராதரவோடும் அமைக்கப்பட்ட அந்தத் தூய்மையான ஆட்சி குறித்து உங்களுக்கு யாரோ தவறாகச் சொல்லிவிட்டார்கள் போல என விஜய்யை எள்ளி நகையாடியுள்ள உதயநிதி, தவெக அரசு அமைக்கப்பட்ட விதத்தையே இந்த ஒற்றைப் பதிவின் மூலம் கேள்விக்குறியாக்கியுள்ளார்.
“>