ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து 18 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணிக்கு மாறிய சஞ்சு சாம்சன், சென்னை அணியின் கேப்டன் பதவி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சிஎஸ்கே-வின் அதிகாரப்பூர்வ பாட்காஸ்ட்டில் பேசிய அவர், “ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும்போது அங்கு கோரிக்கைகளை முன்வைக்கக்கூடாது” என முதிர்ச்சியுடன் பதிலளித்தார். ருதுராஜ் தலைமையின் கீழ் ஒரு வீரராகப் பங்களிப்பதே தனக்குப் பெருமை என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் சஞ்சு தான் எதிர்கால சிஎஸ்கே கேப்டன் எனப் பேசி வந்த நிலையில், சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதனும் ருதுராஜ் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறினார். இதற்கிடையில், இந்த சீசனில் 10 போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 402 ரன்களை விளாசி சஞ்சு சாம்சன் மிரட்டி வருகிறார். கேப்டன் பதவிக்காக ஆசைப்படாமல் ரன் மெஷினாகச் செயல்படும் சஞ்சுவின் இந்த அணுகுமுறை சென்னை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.