ஒரு போட்டியில் கூட விளையாடல…! கொல்கத்தா அணியில் இருந்து ரச்சின் ரவீந்த்ரா விலகல்… என்ன காரணம்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
SeithiSolai Tamil May 15, 2026 08:48 PM

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும், தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறையும், எதிர் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா இரண்டு முறையும் என மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குத் தகுதி பெறும்.

தற்போதைய நடப்பு சீசனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 4 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்தில் நீடித்து வருகிறது.

இந்நிலையில், கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா, நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து திடீரென விலகியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி அடுத்து விளையாடவுள்ள டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரச்சின் ரவீந்திரா இந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், நடப்புத் தொடரில் ஒரு போட்டியில் கூட அவர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டு விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா அணி போராடி வரும் சூழலில், அவரது இந்த விலகல் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.