விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாரண்ட்' இணையத் தொடர் Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. விலங்கு ஓடிடி தொடர் மற்றும் மாமன் படத்தின் மூலம் கவனமீர்த்த பிரசாந்த் பாண்டியராஜ் இந்த தொடரில் நாயகனாக நடித்துள்ளார். காளி வெங்கட் , பாலாஜி சக்திவேல் , அருள்தாஸ் , நம்ரிதா ஆகியோர் இந்த தொடரில் நடித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். வாரண்ட் இணையத் தொடரின் விமர்சனத்தை பார்க்கலாம்
திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றுகிறார் நாயகன் கோட்டைக்கருப்பு (பிரசாந்த் பாண்டியராஜ்) . தனது தந்தையின் ஆசைக்காக எப்படியாவது அரசு வேலையில் சேர்வதற்காக எல்லா தேர்வுகளையும் எழுதுகிறார் நாயகன் கோட்டைக்கருப்பன். ஆனால் எல்லா தேர்வுகளிலும் ஒரு சில மார்க் வித்தியாசத்தில் அரசு வேலையை தவறவிடுகிறார். கோட்டைகருப்பின் மாமா காளி வெங்கட் எஸ் அலுவலகத்தில் டிரைவராக இருப்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி கருப்புக்கு போலீஸ் வேலை வாங்கி தருகிறார். வீட்டில் அப்பா அம்மாவால் செல்லமாக வளர்க்கப்படும் கருப்பு போலீஸ் வேலையில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே முற்றிமும் வேற எதார்த்தத்தை எதிர்கொள்கிறார்.
தனது அப்பாவியான குனத்தால் சக அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகளால் கேலிக்கு ஆளாகும் கோட்டைக்கருப்பு தன்னை போலீஸ் வேலைக்கு ஏற்ற மாதிரியான ஒரு நபராக மாற்றிக் கொள்ளும் முனைப்பில் வழிதவறிப் போவதே இந்த தொடரின் மையக் கதை.
மையக் கதைக்குள் செல்ல ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ளாமல் தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே கதைக்குள் சென்று விடுகிறார்கள். எதார்த்தமாக நகரும் கதை , அங்கங்கு சின்ன நகைச்சுவைகள் , காவலர்கள் வேலையில் எதிர்கொள்ளும் சவால்கள் என சுவாரஸ்யமாக கதையை கட்டமைத்திருக்கிறார்கள். நாயகனாக நடித்துள்ள பிரசாந்த் பாண்டியராஜ் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி எதார்த்தமாக நடித்துள்ளார். அவரது அப்பாவித் தனம் பார்வையாளர்களை சீக்கிரமாக கதைக்குள் இழுத்துச் செல்கிறது. மேக்கிங் ரீதியாக பிரம்மாண்டமாக இல்லை கதை சுவாரஸ்யமான திருப்பங்களை எடுப்பதால் அடுத்தடுத்த எபிசோட்களை நோக்கி நகர்கிறோம்.
கோட்டைக் கருப்பு என்கிற கதாபாத்திரத்தை பிரசாந்த் பாண்டியராஜ் மிக எதார்த்தமாக கையாண்டுள்ளார். வன்முறை விரும்பாத கருப்பு போலீஸ் வேலையில் சேர்ந்த பிறகு அந்த இடத்திற்கு ஏற்ற வகையில் தன்னை தகவமைத்துக் கொள்கிறார். அதனை தனது நடிப்பில் சிறப்பாக கொண்டுவந்துள்ளார் பிரசாந்த். குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு சிறப்பு . இந்த தொடரில் ஒவ்வொரு சின்ன கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியமான அங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அருள்தாஸ் , காளி வெங்கட் , பாலாஜி சக்திவேல் , அருள்தாஸ் , நம்ரிதா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
வாரன்ட் தொடர் மொத்தம் 8 எபிசோட்களை கொண்டிருக்கிறது