கட் அவுட் வச்சே ஜெயிச்சுட்டாங்க.. முதல்வர் விஜய் குறித்து நக்கலாக பேசி சிரித்த பவன் கல்யாண்
ராகேஷ் தாரா May 26, 2026 06:14 PM

ஆந்திர துணை முதல்வர் தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக கட்சி வெற்றிபெற்றது குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார். வெறும் கட் அவுட் மற்றும் ஹோலோகிராம் வைத்தே தேர்தலை வென்றுள்ளார்கள் என பவன் கல்யாண் பேசியுள்ளது தவெக ஆதரவாளர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் இரு மூத்த திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி விஜய் வெற்றி வாகை சூடியுள்ளது இந்தியளவில் மிகப்பெரிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது. சினிமாவில் இருந்து பல நடிகர்கள் அரசியலுக்கு வந்து போட்டியிட்டிருக்கிறார். அந்த வகையில் கட்சி தொடங்கிய குறைந்த காலத்திற்குள்ளாக ஆட்சியமைத்தவர்கள் எம்.ஜி.ஆர் , என்.டி.ஆர் மற்றும் விஜய் மட்டுமே. சட்டமன்ற தேர்தலில் விஜய் வெற்றிபெற்றது குறித்து அந்திர துணை முதல்வர் பவன் கல்யான் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்

தவெக வெற்றி குறித்து நக்கலாக பேசிய பவன் கல்யாண்

தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக் வலம் வந்தவர்  நடிகர் பவன் கல்யாண். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரஜ ராஜ்யம் கட்சியின் இளைஞர் அணி தலைவராக அரசியலுக்குள் நுழைந்தார். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ஜன சேனா கட்சியைத் தொடங்கினார். 2024 ஆண்டு ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு துணை முதல்வராக பதவியேற்றார். விஜய் முதலமைச்சரானப் பின்  பவன் கல்யாண் மற்றும் விஜயை ஒப்பிட்டு பலர் பேசத் துவங்கினார்கள். இதுகுறித்து பேசுகையில் பவன் கல்யாண் " எங்கள் இருவரையும் ஓப்பிடாதீர்கள். தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் அரசியல் களம் முற்றிலும் வெவ்வேறானவை " என அவர் தெரிவித்திருந்தார். 

கட் அவுட் வைத்து வென்ற விஜய் 

அண்மையில் தனது கட்சி நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய பவன் கல்யாண் சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிபெற்றது குறித்து தனது கருத்தை நக்கலாக பதிவுசெய்தார் அவர் பேசுகையில் " தமிழ்நாட்டு அரசியலைப் பார்க்கையில் விஜய் மிக எளிதாக ஜெயித்துவிட்டார் என்பதை நினைத்து எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது .  வெறும் கட் அவுட் மற்றும் ஹோலோகிராம் வைத்தே ஜெயித்துவிட்டார்கள். ஆனால் நான் கடந்த் 15 ஆண்டுகளாக தெருத் தெருவாக அலைந்து போராடி ஜன சேனா கட்சியை உருவாக்கியிருக்கிறேன். " என பவன் கல்யான் பேசினார் . அவரது பேச்சு தவெக ஆதரவாளர்கள் இடையே கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.