FLASH: அதிமுகவுக்கு அடுத்த அடி! தவெகவில் இணைந்தார் முன்னாள் MLA பழனிசாமி…. 300-க்கும் மேற்பட்டோர் கூண்டோடு ஐக்கியம்….!!
SeithiSolai Tamil May 31, 2026 06:48 PM

தமிழக அரசியல் களத்தில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு அடுத்தடுத்து விழும் அடியின் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டை இலை கோட்டை பலத்த சரிவைச் சந்தித்துள்ளது. வேடசந்தூர் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி (2011 – 2016), தவெக அமைச்சர் செங்கோட்டையன் (KAS) முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிரடியாக இணைந்துள்ளார். அவரது தலைமையில் குஜிலியம்பாறை அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் மற்றும் வேடசந்தூர் ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூண்டோடு அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் ஐக்கியமாகியுள்ளனர்.

​புதிய ஆட்சியைப் பிடித்துள்ள தவெக-வின் அமைச்சர்களான என்.ஆனந்த், ஆதவ் மற்றும் கே.ஏ.எஸ் ஆகியோர் தென் மாவட்டங்களில் அதிமுக கூடாரத்தை மொத்தமாக காலி செய்ய வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு களம் இறங்கியுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் மற்றும் முக்கியப் புள்ளிகளைத் தங்கள் பக்கம் இழுக்க இந்த அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு அதிமுகவினரை தவெக-வில் இணைத்து வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ தலைமையில் 300 பேர் ஒரே நேரத்தில் தவெக-வில் ஐக்கியமாகியுள்ள இந்த அதிரடிச் சம்பவம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, சோஷியல் மீடியாவிலும் செம வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.