“நன்றி சொல்ல வர்றார் நம்ம சிஎம்” – திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை தளபதி விஜய்யின் மெகா களம்…. 10,000 பேர் திரள ஏற்பாடு….!!
SeithiSolai Tamil May 31, 2026 06:48 PM

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சிஎம் விஜய், நாளை (ஜூன் 1) மாலை 5.00 மணிக்குத் திருச்சிக்கு அதிரடி பயணம் மேற்கொள்கிறார். தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி புனித வளனார் கல்லூரி (St. Joseph’s College) மைதானத்தில் நடைபெற உள்ள இந்த விழாவில், சுமார் 5,000 முதல் 10,000 பேர் வரை பங்கேற்கும் வகையில் தவெக நிர்வாகிகள் மிகத் தீவிரமான பாதுகாப்பு மற்றும் மேடை ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். ​முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு விஜய் பொதுமக்களைச் சந்திக்கும் முதல் அதிகாரப்பூர்வ மேடை நிகழ்ச்சி இது என்பதால், தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இப்போதே திருவிழா போன்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்மையில் பெரம்பூர் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தான் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்திருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த மேடையில் இருந்து அடுத்ததாக வரவிருக்கும் 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அரசியல் கணக்குகளை நோக்கி சிஎம் விஜய் அதிரடி முழக்கங்களை முன்வைப்பார் என்பதால் தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.