சூர்யாவின் கருப்பு திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இதனைத் கொண்டாடும் விதமாக சூர்யா கருப்பு படத்தின் ஒளிப்பதிவாளர் , இசையமைப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆகியோருக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அடுத்தபடியாக படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு சூர்யா என்ன பரிசு கொடுக்கப் போகிறார் என்பதை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
சூர்யாவின் 45 ஆவது திரைப்படமான கருப்பு படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கினார். கமலுக்கு விக்ரம் போல சூர்யாவுக்கு கருப்பு திரைப்படம் ஒரு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்துள்ளது. இப்படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன் பல கடன் பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால் சூர்யா தனது சம்பளத்தை திருப்புக் கொடுத்து படத்தை வெளியிட உதவினார். கருப்பு திரைப்படத்தின் வெற்றி சூர்யாவுக்கு மட்டுமின்றி படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒரு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. உலகளவில் இப்படம் திரையரங்குகளில் மட்டும் ரூ300 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில் ஓடிடி தளத்திலும் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளது. சூர்யாவின் கரியரில் அதிக வசூல் ஈட்டிய படம் கருப்பு என்பது குறிப்பிடத்தக்கது .
கருப்பு திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகர் சூர்யா படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அந்த வகையில் படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் , ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு மற்றும் படத்தொகுப்பாளர் ஆர் கலைவானன் ஆகியோருக்கு சூர்ய புதிய 30 லட்சம் மதிப்புள்ள Mahindra BE6 பேட்மேன் எடிஷன் மின்சார காரை பரிசாக வழங்கியுள்ளார். முன்னதாக கார்த்தியின் மெய்யழகன் படத்தின் வெற்றிக்கு இயக்குநர் பிரேம்குமாருக்கு சூர்யா தார் பரிசாக வழங்கியிருந்தார். கருப்பு படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு சூர்யா என்ன ஸ்பெஷல் பரிசு தரப்போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
#Karuppu Blockbuster!
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 31, 2026
Suriya gifted Black Matte Mahindra BE6 Batman Edition electric SUVs to Music director Sai Abhyankkar, Cinematographer GK Vishnu and Editor R Kalaivanan. 👌 pic.twitter.com/1RQPn2IOgX